Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குளிர்காலத்தில் பல நன்மைகளை உண்டாக்கும் தாம்பத்திய உறவு..!

குளிர்காலத்தில் பல நன்மைகளை உண்டாக்கும் தாம்பத்திய உறவு..!

21 கார்த்திகை 2022 திங்கள் 16:25 | பார்வைகள் : 26693


 குளிர்காலம் என்றாலே உடல் கதகதப்பைத் தேடும். இதற்காக யாரையேனும் அணைத்துக்கொள்ளலாமா என்று தோன்றும். அந்த சமயத்தில் தானாக உங்கள் துணை உங்களைத்தான் கட்டி அணைப்பார்கள். பிறகென்னா தானாக எல்லாம் நடந்துவிடும்.

 
குளிர்காலத்தில் சளி , இருமல் வருவது இயல்பு. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். ஆனால் நீங்கள் குளிர்காலத்தில் முழுமையான உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் எனில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாக அதிகரிக்கும். சளி , இருமல், மூக்கு ஒழுகுதல் தொல்லையே இருக்காது.
 
இதுபோன்று குளிர்காலத்தில் தாம்பத்திய உறவு உடலளவிலும் மனதலவிலும் பல நன்மைகளை தருமாம். குறிப்பாக:
 
ஆங்கிலத்தில் Seasonal Affective Disorder என்று அழைப்பார்கள். அதாவது குளிர்காலத்தில் இரவு சீக்கிரம் வந்துவிடும். வெயில் குறைந்த நேரமே இருக்கும். இந்த சமயத்தில் விட்டமின் டி குறைபாட்டால் உடலின் ஆற்றல் சக்தி குறையும். 
 
இதனால் எப்போதும் சோர்வாக, சோம்பேறியாக உணர்வோம். ஆனால் அதற்கு சிறந்த வீட்டுக்குறிப்பு உடலுறவுதான். உடலுறவு கொள்வதால் உடலில் மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் சுரக்கும். அவை மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக இயக்கும். மன அழுத்த இருந்தாலும் விலகும். மகிழ்ச்சி நீடித்திருக்கும்.
 
கதகதப்பான குளிர் ரொம்னாஸ் செய்ய சிறந்த தருணம். அதனால்தான் ஹனிமூம் செல்லும் ஜோடிகள் ஊட்டி, கொடைக்கானல் என மலைப்பிரதேசங்களை தேர்வு செய்வார்கள். அதோடு குளிர்காலத்தில் இரவு சீக்கிரம் நெருங்கிவிடும் என்பதால் வெளியே செல்லும் கணவன் மனைவி வீட்டிற்கு சீக்கிரம் வரக்கூடும். நீண்ட நேரம் பேசிக்கொள்ளவும், ரொமான்ஸ் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
 
குளிர்காலத்தில் பெண்கள் உடலுறவு கொள்வதற்கு சௌகரியமாக உணர்வதாக 2000 ஆண்டு வெளியிட்ட ஆய்வில் கூறியுள்ளனர். சில பெண்கள் மாதவிடாய் சிரமத்தை குறைக்க உடலுறவு கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
 
வெயில் காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதேசமயம் விரைவாகவும் வந்துவிடுமாம். எனவே கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு குளிர்காலம் உகந்தது என்று கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்