Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

திருமண வாழ்க்கையில் எது முக்கியம்..? விவாகரத்து பெற்ற ஆண்கள் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்.

திருமண வாழ்க்கையில் எது முக்கியம்..?  விவாகரத்து பெற்ற ஆண்கள் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்.

11 மார்கழி 2022 ஞாயிறு 06:36 | பார்வைகள் : 12127


 திருமணம் என்பது ஆயிரம் காலத்து பந்தம் / பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், 10 நாள் வெயிலுக்கு அல்லது க்கு பயிர்கள் சேதம் அடைவதைப் போல, திருமண பந்தத்திலும் தடாலடியாக சண்டைகளும், பிரிவுகளும் வந்து விடுகின்றன. நிலையான வாழ்க்கையை காட்டிலும் தற்காலிக கோபமே வெற்றி பெறுகிறது.

 
பொதுவாக திருமண வாழ்க்கை என்றால் சமரசம் இன்றி வாழ முடியாது. புரிந்துணர்வு, மனம் விட்டு பேசுதல், அன்பு, கருணை இவையெல்லாம் இருந்தால் தான் திருமண வாழ்க்கை நீடித்து நிற்கும். ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால் இன்றைக்கு இவையெல்லாம் மறைந்து சண்டை, பொறாமை, சூழ்ச்சி போன்ற குணாதிசயங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிலையில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விவாகரத்து பெற்ற ஆண்கள் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்.
 
மனைவியை அரவணைக்க தயங்கக் கூடாது : மனைவிக்கு கணவன் எப்போதுமே உறுதுணையாக இருக்க வேண்டும். அன்பும், அரவணைப்பும் பலமாக அமையும். உங்களை நம்பி வந்துவிட்ட பெண்ணை மகிழ்ச்சியாக, மனம் நோகாமல், பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும். மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க, தட்டிக் கொடுக்க தயங்காதீர்கள். ஆனால், அலட்சியப்படுத்த வேண்டாம்.
 
மாற்ற முயற்சிக்காதீர்கள் : ஒவ்வொரு தனிநபருக்கும் தனி சுதந்திரம் உண்டு. ஆனால், திருமணம் செய்த கையோடு, மனைவி உங்கள் பேச்சை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்களுடைய விருப்பம், குணம் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்று நினைப்பதும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
 
உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு : நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உங்கள் மனைவியின் வேலை அல்ல. எனவே, எனக்கு ஏன் அதை செய்யவில்லை, ஏன் இப்படி நடந்து கொள்ளவில்லை என்று கேட்டு மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
 
மனைவி தன் போக்கில் இருக்க வேண்டும் : மனைவி கவலையாக இருக்கும் தருணத்தில் அல்லது விரக்தி அடைந்த தருணத்தில், அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் அவர்களிடமே விட்டு விடுங்கள். துன்பத்தின்போது பக்க பலமாக, உறுதுணையாக இருப்பது அவசியம் தான். ஆனல், அறிவுரைகளை அள்ளி கொட்டாதீர்கள்.
 
பணத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம் : அதிக செலவு செய்கிறோம், சேமிப்பு என்பதே இல்லை, கடனாளியாகிவிட்டோம் என்ற கவலை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், மனைவிக்கு தேவையான அத்தியாவசிய செலவுகளை செய்ய தயக்கம் வேண்டாம். பண விஷயத்தில் நீங்கள் பாகுபாடு காட்டுவது தெரிய வந்தால், அது இருவருக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கி விடும். ஆகவே, அவசியமான தேவைகளுக்கு செலவு செய்ய தயங்க வேண்டாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்