செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்
5 ஆவணி 2014 செவ்வாய் 10:52 | பார்வைகள் : 15065
2021 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கவுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புதிய ரோவர் விண்கலமானது அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் ஒட்சிசனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்கள் செல்வதை சாத்தியமாக்கும் வகையில் அந்தக் கிரகத்தில் 7 விஞ்ஞான செயற்றிட்டங்களை அந்த ரோவர் விண்கலம் முன்னெடுக்கவுள்ளதுடன் செவ்வாய்க் கிரகத்திலான உயிர் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.
இதபோது மேற்படி விண்கலம் செவ்வாய்க்கிரகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காபனீரொட்சைட்டு வாயுவை ஒட்சிசனாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
இது அங்கு மனிதர்கள் வாழ்வதை சாத்தியமாக்குவதுடன் அக்கிரகத்துக்கு பயணத்தை மேற்கொள்ளும் ஏவுகணைகள் மீளப் பூமிக்கு திரும்பும் நடவடிக்கைக்காக எரிபொருளைப் பெறுவதற்கும் வழிவகை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த ரோவர் விண்கலம் இரு புகைப்படக் கருவிகள், காலநிலை பரி சோதனை உபகரணம் என்பனவற்றை உள்ள டக்கியிருக்கும் என கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan