Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பூமியை கடக்கும் "ராட்சத விண்கல்" அழியப்போகும் நாடு எது?

பூமியை கடக்கும்

26 பங்குனி 2015 வியாழன் 09:32 | பார்வைகள் : 16012


 37000 கி.மீ. வேகத்தில் பூமியை கடக்கும் ராட்சத விண்கல் பூமி மீது மோதினால் ஒரு நாடே அழியும் அபாயம் ஏற்படும் என நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2014-YB335 என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல்லை ஆராய்ச்சியாளர்கள் கடந்தாண்டு கண்டுபிடித்தனர்.
 
மணிக்கு சுமார் 23 ஆயிரம் கிலோ மீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அந்த விண்கல், நாளை பூமியிலிருந்து 37000 கிலோ மீற்றர் தூரத்தில் கடந்து செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
 
அதாவது பூமிக்கும், நிலாவிற்கும் உள்ள தூரத்தை ஒப்பிடும்போது, விண்கலம் கடக்கும் தூரமானது 11 மடங்கு அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
1000 மீற்றர் அகலம் உள்ள ஒரு விண்கல் பூமிக்கு அருகில் கடப்பது 5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரிதான நிகழ்வாகும்.
 
இந்த விண்கல் பூமி மீது மோதாது என ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறியிருந்தாலும், விண்கல் பூமி மீது விழுந்தால் ஒரு நாடே அழியும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
 
இது மட்டுமல்லாமல், விண்கல் பூமி மீது மோதினால் காலநிலை மாற்றங்கள், பூகம்பங்கள் மற்றும் சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 1908 ஆம் ஆண்டு சைபீரியா நாட்டின் டுங்குஸ்கா(Tunguska) பகுதியில் விழுந்த 50 மீற்றர் அகலம் கொண்ட ஒரு சிறிய விண்கல், சுமார் 80 மில்லியன் மரங்களை அழித்து நாசம் செய்தது, ரஷ்யாவில் நில அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.
 
விண்வெளி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பில் நாபியர்(Bill Napier) கூறுகையில், பூமிக்கு விண்கற்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது.
 
விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.
 
தற்போது பூமியை நோக்கி வரும் 2014-YB335 விண்கல் பூமி மீது மோதாவிட்டாலும், எதிர்காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு உள்ள அபாயத்தை முன்கூட்டிய தடுக்கும் வகையில் விஞ்ஞானம் இன்னும் முன்னேறவில்லை என்று கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்