ஆரோக்கியத்தை குறைக்கும் உப்பு..

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14087
ஆதிகால மனிதன் தனது உணவில் உப்பை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தி வந்தான். ஒரு வாரத்திற்கு 250 மில்லி கிராம் உப்பு என்ற அளவிலே அவனது உபயோகம் இருந்தது. இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது.
அதாவது 600 மில்லி கிராம் கூடுதலாக உப்பை உணவாக உட்கொள்கிறான். இதெல்லாம் மேலைநாடுகளில் உள்ள கணக்கு. இந்தியாவின் நிலைமையை கேட்கவே வேண்டாம். சுமார் 10 ஆயிரம் மில்லி கிராம் உப்பை உணவில் சேர்த்து உணவை விஷமாக்கி வருகிறார்கள்.
உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும், குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
ஆனால், இந்த வகை தனிம உப்புகளுக்கு உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறான். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உப்பு உடலில் அதிகமாகும் போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால் உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும் என்கிறார்கள்.
இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் சோடியம் அல்கிளேட் என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள், விரைவாக கெடுகின்றன.
உணவை சரியாக ஜீரணிக்க இயலாத கடல் உப்பை மனிதன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதால் நரம்புகளில் எரிச்சலை தந்து வயிற்றில் உள்ள பாதுகாப்பு ஜவ்வுகளை அரித்து குடல் புண் நோய்க்கு ஆளாகிறான். அதனால் அளவோடு உப்பை பயன் படுத்துவது நல்லது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1