பூமியை போன்று மேலும் 10 கிரகங்கள்: நாசா தகவல்!!

22 ஆனி 2017 வியாழன் 03:32 | பார்வைகள் : 11880
நாசா விஞ்ஞானிகள் பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை கொண்டு மேலும் 10 கிரகங்களை கண்டறிந்து உள்ளனர்.
இந்த 10 கிரகங்களும் பூமியை போன்று தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டுள்ளதாம். மேலும் 219 கிரகங்கள் உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் பூமி போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது. விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர்.
இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையிலும் சுமார் 50 கிரகங்களை வரை இருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது 10 கிரகங்கள் தான் கண்டறியப்பட்டுள்ளன.