பேரழிவு ஆரம்பம்! பீதியை ஏற்படுத்தியுள்ள நிரூபு

7 கார்த்திகை 2017 செவ்வாய் 05:02 | பார்வைகள் : 13380
3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் ஆண்டு நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நேற்று அல்ல உலகம் இதோ அழியப்போகின்றது, நாளை அழியப் போகின்றது என்ற செய்திகள் (வதந்திகள்) மக்களிடையே அவ்வப்போது வந்து சென்ற வண்ணமே இருக்கின்றது.
இதன் காரணமாக உலக அழிவு என்றாலே உலக மகா பொய் என்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது. அதுவும் நன்மைக்கே காரணம் பல முறை பொய்களைச் சொல்லி வந்தால் அது மெய்யாகும் போது பீதிகள் குறைவடையும் என்பதால்.
இப்போது இந்த நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படும் பேரழிவுக்கு காரணமாக பிளானட் எக்ஸ் அல்லது இருண்ட கிரகத்தினைக் கூறுகின்றார்கள் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள்.
இருண்ட கிரகம் தொடர்பில் முக்கியமான விடயம் யாதெனின் இது வரையிலும் இந்த அழிவுக் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறுக்கவும் இல்லை, அதே சமயம் உறுதி செய்யவும் இல்லை.
இருக்கு ஆனால் இல்லை என்ற ஓர் கொள்கைளிலேயே விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்றாலும் கோடிக்கணக்காக டொலர்களைக் கொட்டி தேடப்படும் ஆய்வுகள் காரணமாக பிளானட் எக்ஸ் எனப்படும் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை.
நிரூபு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் கிரகம் 3600 வருடங்களுக்கு ஒருமுறை எமது சூரிய மண்டலத்தின் சுற்றுப்பாதைக்குள் பிரவேசிக்கும் எனக் கூறப்படுகின்றது.
அதன் படி தற்போது இந்தக் கிரகம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வரவுள்ளதாகவும் அதன் மாற்றங்கள் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் தென்படும் எனவும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்தக் கிரகம் எமது சூரியத் தொகுதியினை அண்மிக்கும் போது பூமியில் நிலநடுக்கங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் 16ஆம் திகதி பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரிய நிலப்பிளவு ஏற்பட்டு பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து அலாஸ்கா, ரஷ்யா மற்றும் அமெரிக்க வெஸ்ட் கோஸ்ட் மட்டுமல்லாது இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலான பகுதிகளை அழிவடையும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இந்த பேரழிவின் காரணமாக மில்லியன் கணக்கான மக்களும் பாதிப்படைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரூபு கிரகம் பூமியை நெருங்கும் போது பூமியில் இயற்கை அழிவுகள், நில நடுக்கங்கள் என்பன அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
அவ்வகையில் தற்போது பூமியில் ஆங்காங்கே ஏற்படும் நில அதிர்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களைப் பார்க்கும் போது இந்த சதியாலோசனைக் கோட்பாடு என்பது மெய்யாக இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025