பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..!!

17 புரட்டாசி 2018 திங்கள் 10:57 | பார்வைகள் : 12276
NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப் பாய்ச்சியுள்ளது. ICESat-2 எனும் அந்தத் துணைக்கோளைத் தாங்கிச் சென்றது டெல்டா 2 உந்துகணை.
பூமியின் மேற்பரப்பில் உள்ள பனி மலைகள், பனிப் பாறைகள், கடலில் உள்ள பனிக்கட்டிகள், தாவரங்கள் முதலியவற்றில் ஏற்படும் மாற்றங்களை அதனால் துல்லியமாக அளவிடமுடியும்.
புதிய துணைக்கோளின் உதவியுடன் பனிப் படலங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைத் திரட்டுவது இலக்கு.
குறிப்பாக, கிரீன்லந்து, அண்டார்ட்டிகா ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தப்படும்.
கடல் மட்டம் உயர்வதற்கு பனிப் படலங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை ICESat-2 கண்டறிய விழைகிறது.
பனிப் படலங்கள் கரைவதால், ஆண்டுதோறும் 1 மில்லிமீட்டருக்கும் அதிகமாக கடல் மட்டம் உயர்வதாக NASA கூறியது.
2003 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ICESat-1 துணைக்கோளத்தின் மூலம் பனிப்பாறைகள், மேகம், நில அமைப்பு ஆகியன குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
பின்னர், NASAவின் 'Operation IceBridge' எனும் விண்வெளித் திட்டத்தின்கீழ், வானில் இயங்கும் கருவிகள் மூலம் அந்த ஆய்வு தொடர்ந்தது.
ICESat-1 துணைக்கோளைக் காட்டிலும் தற்போது பாய்ச்சப்பட்டுள்ள ICESat-2, 250 மடங்குக்கும் அதிகமாகத் தகவல்களைத் திரட்டும் திறன் பெற்றது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025