Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பூமியைப் போல இருக்கும் இரு கோள்களைக் கண்டுபிடித்த தொலைநோக்கி!

பூமியைப் போல இருக்கும் இரு கோள்களைக் கண்டுபிடித்த தொலைநோக்கி!

27 ஆடி 2019 சனி 03:04 | பார்வைகள் : 12877


ஸ்பெயினின் தென் பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வுக் கூடம், ஒரே அளவிலான இரு கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.
 
அவை, அளவிலும் தோற்றத்திலும் பூமியைப் போல இருப்பதாகவும் 12.5 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
அல்மேரியா மாநிலத்தில் உள்ளது 2,000 மீட்டர் உயரத்தைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை.
 
இங்குதான் அமைந்துள்ளது ஐரோப்பாவின் ஆகப் பெரிய தொலைநோக்கி.
 
Calar Alto என்ற ஆய்வுக்கூடத்திற்குள் இருக்கும் அந்தத் தொலைநோக்கி தான் புதிய கோள்களைக் கண்டுபிடிப்பதற்குத் துணை புரிகிறது.
 
பூமிக்கு அப்பால் உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பொறுப்பும் இந்தக் கருவிக்கு உண்டு.
 
13 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி 270 டன் இயந்திரத்தின் உதவியுடன் உயர்த்தப்படுகிறது, இறக்கப்படுகிறது, சுழல்கிறது ...
 
Teegarden என்ற நட்சத்திரத்துடன் இரண்டு புதிய கோள்களைக் கடந்த வாரம் கண்டுபிடிக்க தொலைநோக்கி உதவியது.
 
ஏன் இத்தகைய ஆபத்தான மலைப்பகுதி, ஆய்வுக்கூடம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான விடை இரவில்தான் அதிகமாகப் புலப்படும்.
 
இவை போன்ற பிரமிக்க வைக்கும் காட்சிகள், கூடத்திற்கு வருகையளிப்போரை வரவேற்கின்றன.
 
பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான முயற்சி தேவையான ஒன்றுதான் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்