வானில் நிகழும் மிக அரிதான ரத்த நிலா..!

22 வைகாசி 2021 சனி 07:04 | பார்வைகள் : 12135
வானில் நிகழும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26ம் தேதி காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் அன்றைய தினம் மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளதாக கோளரங்க இயக்குநர் தெரிவித்தார். இந்த முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும் என்றார் அவர்.
கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும் என்று கூறிய கோளரங்க இயக்குநர், பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக அவ்வாறு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025