Paristamil Navigation Paristamil advert login

செவ்வாயில் பாறைத் துண்டுகளை ஆய்வுக்குச் சேகரிக்கும் முயற்சி தோல்வி!

செவ்வாயில் பாறைத் துண்டுகளை ஆய்வுக்குச் சேகரிக்கும் முயற்சி தோல்வி!

8 ஆவணி 2021 ஞாயிறு 10:41 | பார்வைகள் : 12317


அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுக்காகப் பாறைத் துண்டுகளைச் சேகரிப்பதன் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

 
செவ்வாயில் உள்ள பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ஊர்தி தரையிறங்கியுள்ளது. அந்தப் பகுதியில்  உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக அங்கிருந்து பாறைத் துண்டுகளை எடுக்க முயற்சி நடைபெற்றது.
 
ரோவரில் உள்ள துளையிடும் கருவி மூலம் செவ்வாயின் தரையில் துளையிட்ட போதும் அதிலிருந்து பாறைத் துண்டை எடுத்துக் குழாயில் அடைக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்