சைக்கி என்ற சிறு கோளில் குவிந்து கிடக்கும் தங்க, வைரம்!
20 ஆவணி 2020 வியாழன் 07:06 | பார்வைகள் : 14568
விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட விநோதமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், பனிக்கட்டியால் உருவான சிறுகோள்கள் பற்றி கேள்விபட்டுள்ளோம். அதே போல, உலோகத்தால் உருவான சிறிய கோள்தான் இந்த 16 ஸைக்கி .
உலகில் உள்ள ஒவ்வொருவரையும் கோடீஸ்வராக மாற்றுமளவுக்கு அளவுக்கு இங்கு தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது குறித்து விரைவான ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த 1952- ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 16 சைக்கியில் 10 லட்சம் டாலர் குவாடிரில்லியன் மதிப்புக்கு தங்கமும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 226 கிலோ மீட்டர் விட்டமுள்ள இந்த விண்கல், செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கோடிக்கணக்கான வருடங்களுக்கு மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு 17 பில்லியன் டன் நிக்கல் மற்றும் இரும்பு தாது இருப்பதாக வால் ஸ்டீர்ட் ஆய்வு நிறுவனமான Bernstein ஏற்கனவே கூறியுள்ளது.
வரும் 2022 ம் ஆண்டு 16 சைக்கி கோளுக்கு விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. மூன்றரை வருடங்கள் பயணம் செய்து அந்த விண்கலம் 2026 - ம் ஆண்டு விண்கல சுற்றுப்பாதையை அடையும் .
சுமார் 21 மாதங்கள் சைக்கி கோளை சுற்றி வந்து அந்த விண்கலம் ஆய்வு செய்யும் .
16 சைக்கி கோளை ஆய்வு செய்ய நாசா 'Psyche' spacecraft என்ற பெயரில் விண்கலத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த விண்கலம் முக்கியமான வடிவமைப்பு" கட்டத்தை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் விண்கலத்தை தயாரித்துள்ளது. பாறை, மண் ஆகியவற்றை தாண்டி முதன்முறையான உலோகங்கள் குறித்து நாசா ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவதும் இதுதான் முதன்முறை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan