Paristamil Navigation Paristamil advert login

பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்

பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்

3 ஆனி 2023 சனி 12:31 | பார்வைகள் : 12204


மனித இனத் தின் வளர்ச்சியால், இந்த புவியின் அமைப்பு, தன்மை பெரிதும் மாறிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 

 
அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பியர்கள் காலடி எடுத்துவைக்க தொடங்கிய பிறகுதான் அறிவியல்-தொழில்நுட்ப மாற்றங்கள் புதுவேகமும் வடிவமும் பெற்றன. பூமியின் வரலாற்றை நிலஅறிவியல் அறிஞர்கள் பல கட்டங்களாக பிரித்து இருக்கிறார்கள். கண்டங்களின் நிலத்தட்டுகள் பிளவுபட்டு, நகர்ந்து, பிறகு ஒன்றொடொன்று உரசிக்கொண்ட காலத்தையே பூமி அமைப்பில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக கருதுவோர் பலர் உண்டு. 
 
விண்ணில் இருந்து வந்து பூமியின் மீது பெரிய விண்கல் விழுந்த காலத்தையே முக்கிய மாற்றத்துக்கான கட்டமாகக்கொள்ள வேண்டும் என்று கூறி, அதையே மனித யுகமாக அறிவிக்க வேண்டும் என்போரும் உண்டு.
 
பருவநிலையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்திய காலத்தைத்தான் புவி அறிவியல் காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம் ஏற்பட்ட காலமாகக் கருத வேண்டும் என்பவர்களும் உண்டு.
சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகம் (ஐஸ் ஏஜ்) முடிவடைய தொடங்கியது. அப்போதுதான் ஹோலோசீன் காலகட்டம் தொடங்கியது. 
 
அதுதான் இப்போதும் தொடர்கிறது. மனித இனத்தின் வளர்ச்சியால், இந்த புவியின் அமைப்பு, தன்மை பெரிதும் மாறிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 
 
உலக வர்த்தகம் விரிவடைந்ததுடன், உணவுப்பண்டங்கள், பொருட்கள் நாடு களுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டன. உலகின் ஒரு பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட தானியங்கள் மற்றப் பகுதிகளுக்கும் பரவின.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்