சுழல் அச்சில் இருந்து விலகும் பூமி - ஆய்வு தகவல்
4 ஆடி 2023 செவ்வாய் 10:04 | பார்வைகள் : 10627
நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதன் காரணமாக பூமிச் சூழற்சியின் அச்சு, 1993 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 80 செ. மீ. கிழக்கு நோக்கிச் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து, அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் (Geophysical Research Letters, a journal of the American Geophysical Union) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால், பெரும் நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, கடவின் மட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாய்வின் தலைமை ஆய்வாளரான தென்கொரியாவின் சோல் தேசிய பல்கலைகழகத்தின் புவி அறிவியல் பேராசிரியரான கி-வெயான் சோ குறிப்பிடுகையில்,
“நிலத்தடியிலிருந்து உறிஞ்சு எடுக்கப்படும் நீர் காற்றில் ஆவியாகின்றது அல்லது ஆறுகளில் சென்று கலக்கிறது. இம்முறையில், நீர் நிலத்தடியிலிருந்து கடல்களுக்கு இடம்பெயர்கிறது” என்கிறார்.
இந்த ஆய்வின்படி, பூமியின் நடு-அட்சரேகைகள் (mid-latitudes) பகுதியிலிருந்து நிலத்தடி நீர் நீர் உறிஞ்சப்படுவதனால், அச்செயற்பாடு சுழல் அச்சின் கோணத்தை மாற்றுவதில் அதிக பங்காற்றுகின்றது.
மேலும், உலகின் வடமேற்கு அமெரிக்காவிலும், வடமேற்கு இந்தியாவிலுமே நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், கி-வெயான் சோ குறிப்பிடுகையில், நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்தால் இதைச் சரிசெய்யலாம், ஆனால் அதற்கு பல பத்தாண்டுகளுக்கு நிலத்தடி நீர் எடுப்பதைக் குறைக்க வேண்டும்.
அத்துடன், கடும் வறட்சிக்காலங்கள், நிலத்தடி நீர் மேலும் உறிஞ்சப்படுவதனால், கடல்மட்டம் உயர்வதற்கும் வழிவகுக்கும் என்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan