சர்வதேச விண்வெளி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் விண்வெளி வீரர்கள்!
18 மார்கழி 2021 சனி 06:40 | பார்வைகள் : 12986
சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி அங்கு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் 3 வீரர்களும் உடல்நலத்தை பேணுவதற்காக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவை சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அதன் கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி ஷென்சோ 13 என்ற விண்கலம் மூலமாக ஜாய் ஜிகாங், யே குவாங்ஃபு ஆகிய 2 வீரர்களும், வாங் யாப்பிங் என்ற வீராங்கனையும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விண்வெளியில் புவியீர்ப்பு மிக நுண்ணிய அளவிலேயே காணப்படுவதால் ஏற்படும் உடல் நல கோளாறுகளை தவிர்க்கும் வகையில் அவர்கள் மூவரும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan