Paristamil Navigation Paristamil advert login

நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள்

நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள்

8 ஐப்பசி 2022 சனி 15:27 | பார்வைகள் : 8483


ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அவர்கள் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவில் செடிகளை வளர்க்கத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் நிலவில் மனிதச் சமூகம் வாழ்வதற்கு வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.
 
குவீன்ஸ்லந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செடிகளுக்கான உயிரியல் ஆய்வாளரான பிரெட் வில்லியம்ஸ் (Brett WIlliams) திட்டத்தைப் பற்றி மேலும் விவரித்தார். 
 
Beresheet 2 எனும் தனியார் இஸ்ரேலிய உந்துகணை விதைகளை நிலவுக்குக் கொண்டுசெல்லும். 
 
நிலவுக்குச் சென்றபின் மூடிவைக்கப்பட்ட அறையில் விதைகளுக்கு நீர் ஊற்றப்படும். அவை செடிகளாக வளர்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும். சிறப்பாக வளரும் செடிகள் தேந்தெடுக்கப்படும்.
 
புதிய திட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நீரின்றி உயிர்வாழக்கூடிய "resurrection grass" என்ற செடி நிலவுக்கு அனுப்பப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித வாழ்வுக்குத் தேவையான உணவு, மருந்து, உயிர்வாயு போன்றவற்றைச் செடிகள் அளிக்கக்கூடியவை. 
 
மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான செடிகளை நிலவில் வளர்க்கப் புதியத் திட்டம் வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்