யூஎப்ஓ போல காட்சியளிக்கும் விசித்திர இளஞ்சிவப்பு மேகம்

23 தை 2023 திங்கள் 11:54 | பார்வைகள் : 9283
துருக்கியில் யூஎப்ஓ (UFO) போல காட்சியளிக்கும் விசித்திர இளஞ்சிவப்பு மேகத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியில் உள்ள பர்சா நகரத்தில் மர்மமான மேகக் கூட்டம் உருவாகியுள்ளது. இந்த மேகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் யூஎப்ஓ (UFO) போல காட்சியளித்தது. யூஎப்ஓ போல காட்சியளிக்கும் இந்த விசித்திர இளஞ்சிவப்பு மேகத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
லெண்டிகுலர் மேகங்கள் என்று கூறப்படும் இவற்றை பார்த்து மக்கள் அனைவரும் திகைத்து நின்றனர். மேகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் பிறகு இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறியது. சூரிய உதயம் போல தோன்றி நடுவில் பெரிய ஓட்டையுடன் காட்சியளித்த இந்த விசித்திர மேகம் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே இருந்தது.
Turkey's Bursa region witnessed an incredible cloud formation… pic.twitter.com/wOWnRTETHp
— Tansu YEĞEN (@TansuYegen) January 20, 2023
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025