Paristamil Navigation Paristamil advert login

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 12560


 உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும். 

 
இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் உள்ளன. இதை தினமும் தொடர்ந்து 2 மாதம் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம். 
 
1. முதலில் ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக அமர்ந்த நிலையில் உங்கள் உதடுகளை மூடிக்கொள்ளுங்கள். பிறகு இரு கன்னங்களையும் உறிஞ்சுவதைப்போல் கன்ன சதையை உள்பக்கமாக இழுங்கள். அதன் பின் இழுத்த கன்னங்களை விடுவிக்க வேண்டும்.  முதலில் ஒரு பக்கம் செய்து பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு 15 முறை செய்த பின்னர் சில விநாடிகள் ஓய்வு எடுத்து இரு கன்னங்களுக்கும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அதே 15 முறை செய்ய வேண்டும். 
 
2. உங்களுடைய வாயில் எவ்வளவு காற்றை நிரப்பிக் கொண்டு மூட முடியுமோ அவ்வளவு காற்றை நிரப்பி கொள்ளுங்கள்.  சில நிமிடங்கள் காற்று வெளிவராதவாறு மேல் உதடைக்கொண்டு மூடவும். பிறகு வாயை மூடியவாறே இடது மற்றும் வலது பக்கம் கன்னங்களுக்கு காற்றை நகர்த்தவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். 
 
3. உங்கள் உதடுகளை மூடவும். பிறகு உங்களுடைய கன்னங்களின் சதையைக் கொண்டு உதடுகளை சுருக்கவும். அதன்பின் சுறுக்கிய உதடுகளை சில நிமிடங்களுக்கு பிறகு விட்டுவிடவேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். 
 
- இந்த பயிற்சிகளை காலையில் செய்தால் தான் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முதல் பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்