Paristamil Navigation Paristamil advert login

தைராய்டு கருவில் வளரும் சிசுவை பாதிக்குமா?

தைராய்டு கருவில் வளரும் சிசுவை பாதிக்குமா?

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14285


 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கால் வீக்கமடைதல், குமட்டல், மயக்கம், சோர்வு போன்ற சில பிரச்சனைகளை சந்திப்பார்கள்.  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனை தான் தைராய்டு. தைராய்டு ஹார்மோனானது ஏற்றதாழ்வுடன் இருந்தால், அவை நிச்சயம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

 
அதிலும் கர்ப்பமாவதற்கு முன்பே தைராய்டு பிரச்சனை இருந்தால், பின் கர்ப்பமடைந்த பின் அவை தீவிரமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அதிகம் இருந்தாலும் சரி அல்லது குறைவாக இருந்தாலும் சரி, அவை குழந்தையை நிச்சயம் பாதிக்கும். 
 
கர்ப்ப காலத்தில் தைராய்டு இருந்தால், அவை குழந்தையை எப்படியெல்லாம் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்ககலாம், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதத்தில் இரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக இருந்தால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  
 
அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் போதிய மருத்துவத்தை மேற்கொண்டு தைராய்டு ஹார்மோனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். தைராய்டு ஹார்மோனானது போதிய அளவில் சுரக்காமல் இருந்தால், அவை குழந்தையின் மனநல வளர்ச்சியானது பாதிக்கப்படும். 
 
ஆகவே தைராய்டு இருப்பவர்கள் கர்ப்ப காலத்தில் போதிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, தைராய்டிற்கு எடுத்து வரும் மருந்துகளில் உள்ள ரேடியோ ஆக்டிவ் அயோடின், சில நேரங்களில் குழந்தையின் தைராய்டு சுரப்பிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 
 
எனவே கர்ப்பமான பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்து வாருங்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் கைமருத்தும் என்று கூறும் எதையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். பெண்களுக்கு ஆரம்பத்தில் தைராய்டு பிரச்சனை இருந்தால் அதற்கான உரிய மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். 
 
கர்ப்பம் அடைந்த பெண்கள் உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் ஆரம்பத்திலேயே மருந்துவரிடம் அந்த தகவலை தெரிவித்து விட வேண்டும். அப்போது தான் அவர் அதற்கான உரிய மருந்துகளை உங்களுக்கு பரிந்துரைப்பார். மருத்துவரின் ஆலோசனைகளையும், சரியான மருந்துகளையும் எடுக்கா விட்டால் வயிற்றில் வளரும் சிசுவையை பாதிக்கும்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்