Paristamil Navigation Paristamil advert login

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்பு! - பாப்பரசர் லியோ கவலை

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்பு! - பாப்பரசர்  லியோ கவலை

12 தை 2026 திங்கள் 18:17 | பார்வைகள் : 373


ஈரான், சிரியா முதலிய நாடுகளில் அதிகரித்து வரும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து தான் வருந்துவதாக புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். 
வத்திக்கான் நகரில் நடைபெற்ற இறை வணக்க நிகழ்வுக்குப் பின்னர் அங்கு உரையாற்றிய புனித பாப்பரசர் லியோ மேலும் கூறுகையில்,
ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியான வன்முறை மற்றும் பதற்ற நிலையால் மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். எனது சிந்தனையெல்லாம் அங்குள்ள சூழ்நிலையைப் பற்றியதாகவே உள்ளது. 
ஒட்டுமொத்த சமூகத்தின் பொது நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்றும் புனித பாப்பரசர் லியோ மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்