Paristamil Navigation Paristamil advert login

மூதாட்டியின் நம்பிக்கையை பயன்படுத்தி 8 லட்சம் யூரோக்களை மோசடி செய்த முதியோர் இல்ல இயக்குநர்!!

மூதாட்டியின் நம்பிக்கையை பயன்படுத்தி 8 லட்சம் யூரோக்களை மோசடி செய்த முதியோர் இல்ல இயக்குநர்!!

11 தை 2026 ஞாயிறு 14:47 | பார்வைகள் : 1169


Val-d’Oise பகுதியில் உள்ள (Eaubonne) நகரில் அமைந்த ஒரு முதியோர் இல்லத்தின் (EHPAD) இயக்குநர், அங்கு வசித்த 90 வயதுக்கு மேற்பட்ட ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 8 லட்சம் யூரோக்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

அந்த மூதாட்டிக்கு வாரிசுகள் இல்லை என்பதை அறிந்த அவர், பல ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அவரது வங்கி கணக்குகளுக்கு அதிகாரம் (procuration) பெற்று பெரும் தொகையை தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த மோசடி, அந்த மூதாட்டியின் வங்கி ஆலோசகர் கண்டுபிடித்த சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், இயக்குநர் அந்த மூதாட்டியின் 6 லட்சம் யூரோக்கள் மதிப்புள்ள உயிர் காப்பீட்டு ஒப்பந்தங்களை மாற்றி, தன்னை ஒரே பெறுநராக (legataire) நியமித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. 

Clariane குழு அவரை பணிநீக்கம் செய்துள்ளது; மேலும், 2013 ஆம் ஆண்டில் இதேபோன்ற நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக அவர் ஏற்கனவே தண்டனை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்