Paristamil Navigation Paristamil advert login

யாழில் புகையிரதக் கடவையில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலி

யாழில் புகையிரதக் கடவையில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலி

11 தை 2026 ஞாயிறு 12:03 | பார்வைகள் : 249


யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன்  (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி  நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த சொகுசு புகையிரதத்துடன், அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது 

வர்த்தக‌ விளம்பரங்கள்