Paristamil Navigation Paristamil advert login

"மக்கள் வாக்கெடுப்பு ஒரு அச்சுறுத்தல் அல்ல": தேசிய சபை கலைப்பு பற்றி மெலாஞ்சோன்!!

"மக்கள் வாக்கெடுப்பு ஒரு அச்சுறுத்தல் அல்ல": தேசிய சபை கலைப்பு  பற்றி மெலாஞ்சோன்!!

11 தை 2026 ஞாயிறு 08:02 | பார்வைகள் : 803


அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தேசிய சபை கலைக்கப்பட்டு முன்கூட்டிய சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறலாம் என்ற சூழலில், La France Insoumise தலைவர் ஜோன்-லூக் மெலாஞ்சோன் (Jean-Luc Mélenchon), "எங்களுக்கு தேர்தலைப் பற்றிய எந்தப் பயமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

வில்லர்பான் (Villeurbanne-Rhône), நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், « அவர்கள் தேசிய சபையை கலைக்க விரும்பினால், செய்து விடட்டும் » என்றும் கூறியுள்ளார். மக்கள் வாக்கெடுப்பு எங்களைப் பொறுத்தவரை ஒரு அச்சுறுத்தல் அல்ல என்றும் அவர் வலியுறித்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, Rassemblement national மற்றும் LFI கட்சிகள் அரசாங்கத்தைத் தணிக்கை செய்ய முனைவதால், தணிக்கை ஏற்பட்டால் சபை கலைப்பு நடக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த மெலாஞ்சோன், தங்கள் இயக்கம் எப்போதும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், தேர்தல் காலம் மக்களெல்லாம் அரசியலில் ஈடுபடும் உற்சாகமான நேரம் என்றும் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்