Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் ஹிந்து இளைஞர் சுட்டுக் கொலை - வெடித்தத போராட்டம்

பாகிஸ்தானில்  ஹிந்து இளைஞர் சுட்டுக் கொலை  -  வெடித்தத போராட்டம்

11 தை 2026 ஞாயிறு 07:59 | பார்வைகள் : 394


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், கடந்த 4ம் திகதி பாடின் மாவட்டத்தில் உள்ள ராஹோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோல்ஹி, 25, என்ற ஹிந்து இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் சிறிய குடிசை வீடு கட்டியபோது, அப்பகுதியைச் சேர்ந்த சர்பராஸ் நிசாமானி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சர்பராஸ், பட்டப்பகலில் வீடு புகுந்து கைலா ஷை சுட்டார். இதில், அவர் உயிரிழந்தார்.

இந்தக் கொலையை கண்டித்து, ஹிந்துக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.பாடின்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை முழுமையாக மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள், 'கைலாஷுக்கு நீதி வேண்டும்' என, முழக்கமிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்