Paristamil Navigation Paristamil advert login

வடகொரியாவில் அத்துமீறி ஊடுருவிய தென்கொரிய ட்ரோன்கள்

வடகொரியாவில் அத்துமீறி ஊடுருவிய தென்கொரிய ட்ரோன்கள்

10 தை 2026 சனி 16:25 | பார்வைகள் : 1494


வட கொரியா மீதான ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டுகளை தென் கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தங்கள் நாட்டின் வான் பரப்பிற்குள் தென்கொரியாவின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக வட கொரியா குற்றச்சாட்டியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, தங்கள் நாட்டின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது, இதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 
ஆனால் ட்ரோன் அத்துமீறல் தொடர்பான பியோங்யாங் குற்றச்சாட்டை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் அன் கியூ-பெக்(Ahn Gyu-Back) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ட்ரோன் அத்துமீறல் தொடர்பாக வட கொரியா வெளியிட்ட ஆதாரங்கள் தென்கொரிய ராணுவத்தின் விமானப்படை மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தை குறைக்க சியோல் மற்றும் பியோங்யாங் அதிகாரிகள் இணைந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தென்கொரியா முன்மொழிந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்