Paristamil Navigation Paristamil advert login

பராசக்தி படம் எதிர்பார்த்த வசூலை பெறுமா ?

பராசக்தி படம் எதிர்பார்த்த வசூலை  பெறுமா ?

10 தை 2026 சனி 15:23 | பார்வைகள் : 374


சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா உள்ளிட்ட பலர் நடித்து சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பராசக்தி. 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடந்த குறிப்பாக திராவிட இயக்கம் தூக்கிப் பிடித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. ஜனநாயகன் படத்தை போலவே இந்த படத்திற்கும் தணிக்கை வாரியத்தில் பல ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு பல வசனங்கள் மாற்றப்பட்டு நீக்கப்பட்டு கடைசியாக யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த படம் சுமார் 600 திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது. அதேநேரம் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை என்பதால் தியேட்டர்கள் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. 25 மாற்றங்களுடன் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று உடனடியாக முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் விஜய் படம் வெளியாகவில்லை என்ற சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பராசக்தி படத்தை பார்க்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே ஜனநாயகனோடு பராசக்தி மோத முடிவெடுத்ததால் சிவகார்த்திகேயன் மீதும், படத்தின் மீதும் அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

எனவே பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எனவே பராசக்தி படத்தை பார்க்க மாட்டேன்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். எனவே, எதிர்பார்த்த வசூலை பராசக்தி பெறுமா என்பது தெரியவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்