Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் வெளிவருமா?

ஜனநாயகன் வெளிவருமா?

10 தை 2026 சனி 14:23 | பார்வைகள் : 345


நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்து ஜனநாயக படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ், குறிப்பாக U/A சான்றிதழ் வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இதை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்தது. இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடிய தீர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கானது ஜனவரி 21ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமானது படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்