Paristamil Navigation Paristamil advert login

பிரஞ்சு விமான நிறுவனத்திற்கு ரஃபேல் ஆர்டர்கள் அதிகரிப்பு!!

பிரஞ்சு விமான நிறுவனத்திற்கு ரஃபேல் ஆர்டர்கள் அதிகரிப்பு!!

9 தை 2026 வெள்ளி 22:33 | பார்வைகள் : 929


2025 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விமான உற்பத்தி செய்யும் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) 26 ரஃபேல் போர் விமானங்களை விநியோகித்து, 7 பில்லியன் யூரோக்களைத் தாண்டும் வருவாயை ஈட்டியுள்ளது.

உலகளாவிய புவியியல் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாடுகள் தங்களின் இராணுவ வலிமையை அதிகரிக்கும் முயற்சிகள் காரணமாக, பாதுகாப்புத் துறையில் டசால்ட் ஏவியேஷன் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட 26 ரஃபேல் விமானங்களில் 15 வெளிநாடுகளுக்காகவும், 11 பிரான்ஸுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட உயர்ந்த எண்ணிக்கையாகும்; அதேபோல் 37 ஃபால்கன் வணிக ஜெட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2025 இல் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் மேலும் 26 ரஃபேல் விமானங்கள் ஆர்டர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 220 விமானங்கள் வருங்கால விநியோகத்திற்காக உள்ளன. உக்ரைன் 100 போர் விமானங்களுக்கு கையெழுத்தாகும் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டால், 2026 இல் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். 

நிதி நிலை மிகவும் சாதகமாக இருந்தாலும், மாதத்திற்கு மூன்று விமானங்களுக்கும் குறைவான உற்பத்தி வேகம் குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய, அடுத்த ஆண்டில் மாதத்திற்கு மூன்று, 2028–29 முதல் நான்கு ரஃபேல் விமானங்களை விநியோகிக்கும் திட்டம் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்