Paristamil Navigation Paristamil advert login

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா! ராமதாஸ் பதில்

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா! ராமதாஸ் பதில்

10 தை 2026 சனி 13:54 | பார்வைகள் : 454


திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எதுவும் நடக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

தைலாபுரத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், திருமாவளவன் கூட இருக்கக் கூடிய கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு அரசியலில் எதுவும் நடக்கு, என்ன வேணாலும் நடக்கும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும். எதுவும் நடக்காது என்று அரசியலில் சொல்ல முடியாது என்றார்.

தொடர்ந்து மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது கூட்டணியில் இணைந்தால் ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்கமாட்டோம். அமெரிக்க அதிபரிடம் தான் பங்கு கேட்போம். கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது 5 ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தோம்.

அந்த கூட்டணியில் காங்கிரசும் இருந்தது. அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்பது விருப்பம்.

ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. 4 ஆண்டுகால ஸ்டாலினின் ஆட்சி நன்றாக தான் இருக்கிறது.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்