Paristamil Navigation Paristamil advert login

இபிஎஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி

இபிஎஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி

10 தை 2026 சனி 11:59 | பார்வைகள் : 150


அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இபிஎஸ் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மனுதாரர் சூரிய மூர்த்தி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு விசாரித்தது. வழக்கை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்