நாடாளுமன்றம் ஜன.28-ம் தேதி கூடுகிறது: பிப்.1 பட்ஜெட் தாக்கல்
10 தை 2026 சனி 07:29 | பார்வைகள் : 130
கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. ஆண்டு இந்த பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
இதனால் 2026– 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அன்றைய தினம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்றும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள் காட்டி, நாடாளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28 -ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13 -ம் தேதி பிறகு ஒரு மாத கால விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து நாடாளுமன்றம் மார்ச் 9 அன்று மீண்டும் கூடி ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan