Paristamil Navigation Paristamil advert login

யாழில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி அநுர

யாழில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி அநுர

9 தை 2026 வெள்ளி 11:22 | பார்வைகள் : 1675


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது 

வர்த்தக‌ விளம்பரங்கள்