RER A - போக்குவரத்து இடை நிறுத்தம்!
8 தை 2026 வியாழன் 14:11 | பார்வைகள் : 2203
ஒரு கடுமையான விபத்தால், Bry-sur-Marne பகுதியில் RER A போக்குவரத்து பகுதியளவில் நிறுத்தப்பட்டது.
Bry-sur-Marne (Val-de-Marne) பகுதியில் ஏற்பட்ட இந்த கடுமையான விபத்து வியாழக்கிழமை காலை RER A போக்குவரத்துக்கு பெரிய தடங்கலை ஏற்படுத்தியது. Val de Fontenay மற்றும் Noisy-le-Grand–Mont d’Est இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேவை 13h30 மணியளவில் மீண்டும் தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் தடங்கல் நீடிக்கின்றது.
வியாழக்கிழமை காலை Val de Fontenay மற்றும் Noisy-le-Grand–Mont d’Est இடையே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. RER A யின் மற்ற பகுதிகளிலும் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது என, RATP தனது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து 13h30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதுவரை, Noisy-le-Grand–Mont d’Est மற்றும் Val de Fontenay இடையே இரு திசைகளிலும் பதிலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan