Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலா மீது அமெரிக்காவின் ஹைடெக் அட்டாக்... தவிடுபொடியான சீனா ஆயுத தொழில்நுட்பம்

வெனிசுலா மீது அமெரிக்காவின் ஹைடெக் அட்டாக்... தவிடுபொடியான சீனா ஆயுத தொழில்நுட்பம்

8 தை 2026 வியாழன் 11:43 | பார்வைகள் : 706


வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" (Operation Absolute Resolve) என்ற ராணுவ நடவடிக்கையின் போது, சீனாவின் ரேடார் மற்றும் ஆயுதத் தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது

அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே உள்ள நீண்ட கால மோதலை பயன்படுத்திக் கொண்ட சீனா, வெனிசுலா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்தது. அதற்கு ஈடாக அந்த நாட்டுக்கு ஏராள​மான ஆயுதங்​களை ஏற்​றுமதி செய்​தது.  வெனிசுலாவின் வான்பரப்பைப் பாதுகாக்க சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட JY-27A -Anti-stealth radar மற்றும் JYL-1 ஆகிய அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டிருந்தன.

கடந்த 3- ஆம் தேதி, அமெரிக்காவின் F-35, F-22 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பிற விமானங்கள் வெனிசுலா வான் எல்லைக்குள் நுழைந்தபோது, சீன ரேடார்களால் அவற்றை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. அமெரிக்காவின் EA-18G Growler போன்ற மின்னணு போர் விமானங்கள் , சீனாவின் ரேடார் திரைகளை முற்றிலுமாக முடக்கிவிட்டன. இதனால் எங்குத் தாக்குதல் நடக்கிறது என்று தெரியாமல் வெனிசுலா ராணுவம் திகைத்து நின்றது. ரேடார் மட்டுமல்லாமல், எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்த வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளும் தோல்வியடைந்தன.

சீனாவின் HQ-9 மற்றும் FK-3 ரக ஏவுகணைகள், அமெரிக்க விமானங்களை லாக் செய்ய முடியாமல் திணறின.  சீனாவின் ரேடார்கள் தோல்வியடைந்ததால், அவற்றுடன் இணைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் S-300V மற்றும் Buk-M2 ஏவுகணை அமைப்புகளால் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைக்க முடியாமல் போனது. இந்தச் சம்பவம் சர்வதேச ஆயுதச் சந்தையில் சீனாவின் மதிப்பைக் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போதும், பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ரேடார் மற்றும் ஆயுதங்கள் இந்திய விமானங்களுக்கு எதிராகத் தோல்வியடைந்தன. இப்போது வெனிசுலாவிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால், சீனாவின் ஆயுதங்கள் "வெறும் அலங்காரப் பொருட்கள்" என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா, மின்னணு போர்முறை மற்றும் சைபர் தாக்குதல் மூலம் வெனிசுலாவின் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பைத் தகர்த்தது. இதன் காரணமாகச் சீன மற்றும் ரஷ்ய ஆயுதங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முடியாமல் தனித்தனியாகச் சிதறடிக்கப்பட்டன. JY-27A ரேடார்கள் ஏன் அமெரிக்க ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியவில்லை என்பதை ஆராய, சீன ராணுவத்தின் உயர்மட்டப் பொறியாளர்கள் குழுவை சீனா அமைத்துள்ளது.

இது வெறும் தொழில்நுட்பத் தோல்வி மட்டுமல்ல, சர்வதேச ஆயுதச் சந்தையில் சீனாவின் பில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால் பெய்ஜிங் மிகுந்த கவலையில் உள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியுள்ள பாகிஸ்தான், ஈரான் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச மேம்பாடுகளை வழங்கவும் முன்வந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்