Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன்

பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன்

8 தை 2026 வியாழன் 11:08 | பார்வைகள் : 132


பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜனித் லியானகே (Janith Liyanage) 40 ஓட்டங்கள் எடுத்தார்.

சல்மான் மிர்ஸா (Salman Mirza), அப்ரார் அகமது (Abrar Ahmed) தலா 3 விக்கெட்டுகளும், முகமது வாசிம் மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாஹிப்ஸதா ஃபர்ஹான் 36 பந்துகளில் 51 ஓட்டங்களும், ஷதாப் கான் ஆட்டமிழக்காமல் 18 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.

தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா (Dasun Shanaka), "நாங்கள் டி20 கிரிக்கெட் விளையாடும்போது நாணய சுழற்சி மிகவும் முக்கியமானது. குறிப்பாக, இந்த ஆடுகளங்களில் ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயிப்பது எளிதல்ல.

ஆனால், எந்த சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. நாங்கள் விரும்பிய தொடக்கம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதை வரவிருக்கும் போட்டிகளில் நாங்கள் சரிசெய்ய வேண்டும்" என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்