Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் அமுலாகும் புதிய குடிவரவு சீர்திருத்தங்கள்

பிரித்தானியாவில் அமுலாகும் புதிய குடிவரவு சீர்திருத்தங்கள்

8 தை 2026 வியாழன் 11:08 | பார்வைகள் : 407


பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று (08) முதல் உயர்த்தப்படுகின்றதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் தொடர்பில் அதிகாரபூர்வ ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற விளக்கங்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாகவே, பிரித்தானியாவில் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் உயர்த்தப்படுகின்றன. அதேசமயம் பணியிட தொடர்பாடலும் சமூக ஒருங்கிணைப்பும் மேம்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்