Paristamil Navigation Paristamil advert login

கூடுதல் இடங்களை கேட்கும் பாமக.. அதிமுக கணக்கு என்ன?

கூடுதல் இடங்களை கேட்கும் பாமக.. அதிமுக கணக்கு என்ன?

8 தை 2026 வியாழன் 08:38 | பார்வைகள் : 181


அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பாமக-அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து சென்னை கீரின் வேல்ஸ் சாலையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ள நிலையில் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்தது. தற்போது பாமக இரண்டாக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களில் போட்டியிட்ட நிலையில் தற்போது 15 இடங்களை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும், ராமதாஸ் தரப்பை சேர்க்க கூடாது என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. பாமகவில் அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என பிளவு ஏற்பட்டுள்ளதால் ஓட்டுகள் சிதறும் என்பதால் அன்புமணி கேட்கும் இடங்களை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. பாமக உடனான கூட்டணியை அரசியல் கட்சிகள் தங்கள் உடன் நடத்த வேண்டுமென ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்