Paristamil Navigation Paristamil advert login

7 மாவட்டங்களாக குறைந்துள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை: படிப்படியாக மேம்படும் போக்குவரத்து!!

7 மாவட்டங்களாக குறைந்துள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை: படிப்படியாக மேம்படும் போக்குவரத்து!!

7 தை 2026 புதன் 21:58 | பார்வைகள் : 1843


Météo-France புதன்கிழமை மாலை ஏழு மாவட்டங்களுக்கு பனி மற்றும் உறைபனிக்காக செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Île-de-France பிராந்தியத்திலும் Hauts-de-Franceபிராந்தியத்திலும். நண்பகலில் முக்கிய சாலைகளில் 3.5 டன்களுக்கு மேல் எடையுள்ள கனரக சரக்கு வாகனங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை முதல் சில TGV சேவை தடைபட்டுள்ளது என்று SNCF தெரிவித்துள்ளது. குறிப்பாக இல்-து-பிரான்ஸ் பகுதியில், பனியால் தண்டவாள உபகரணங்களில் சிக்கல்கள் உள்ளன என்று SNCF தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இல்-து-பிரான்ஸ் பகுதியில், சாலைகளில் நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது. N118, Pont de Sèvres மற்றும் A86 இடையே பரிஸ் திசையில் மட்டுமே போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் பேருந்துகளைப் பொறுத்தவரை, சேவை படிப்படியாக மீண்டும் தொடங்கப்படுவதாக IDF Mobilités தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, புதன்கிழமை காலை பனிப்பொழிவு காரணமாக Roissy Charles-de-Gaulle விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்களும், Orly-யில் சுமார் 40 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. Roissy-Charles-de-Gaulle விமான நிலையம் இப்போது முழு திறனுடன் இயங்குகிறது, அதே நேரத்தில் Orly-யில் விமான போக்குவரத்து தொடர்ந்தும் தடைபட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்