Paristamil Navigation Paristamil advert login

கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவல் - அவுஸ்திரேலிய மாகாணமொன்றில் அவசர எச்சரிக்கை

கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவல் - அவுஸ்திரேலிய மாகாணமொன்றில் அவசர எச்சரிக்கை

7 தை 2026 புதன் 19:20 | பார்வைகள் : 725


அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருவதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து பரவலான வெள்ளப்பெருக்குடன் போராடி வருகிறது. இந்த சூழலில் விக்டோரியா மாகாணம் மிகக் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது.

பல ஆண்டுகளில் இல்லாத அவுஸ்திரேலியாவின் இந்த கடுமையான வெப்பநிலை உயர்வு, அவசர நிலை காட்டுத் தீயைத் தூண்டியுள்ளது.

அங்கு கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருவதால், உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டிராப்மோர், ரஃபி, கேவியட், டார்கோம்ப், டெரிப் டெரிப், லாங்வுட் ஈஸ்ட், அவெனெல், லாங்வுட், அப்டன் ஹில், பங்கில், தோலோகொலாங் மற்றும் கிரான்யா ஆகிய பகுதிகளுக்கு விக்டோரியாவில் மூன்று அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பெர்த்திற்கு அருகிலும் இரண்டு அவசர காட்டுத் தீ எச்சரிக்கைள் விடுக்கப்பட, Maida Vale பகுதிக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வானிலை ஆய்வு மையம், தெற்கு அவுஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தாங்க முடியாத வெப்பத்தால் தவித்து வருவதாக கூறியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்