Paristamil Navigation Paristamil advert login

Auchanஇன் 2,400 வேலை நீக்கங்களுக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம் !!!!!!

Auchanஇன் 2,400 வேலை நீக்கங்களுக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம் !!!!!!

7 தை 2026 புதன் 15:21 | பார்வைகள் : 3157


Auchan நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான சமூகத் திட்டம், கிட்டத்தட்ட 2,400 வேலைவாய்ப்பை நீக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்ட நிலையில், டூவே (Douai) நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் திட்டத்தினை இன்று ரத்து செய்துள்ளது. 

இந்த வழக்கை CGT தொடங்கியது. அதே நேரத்தில், Île-de-France பகுதியில் உணவுப் பொருட்கள் விநியோகத்தை மேற்கொண்ட Auchan E-Commerce France (AECF) நிறுவனத்தின் சமூக மற்றும் பொருளாதார குழு (CSE) உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்ற முடிவை CGT தொழிற்சங்கம் ஊழியர்களுக்கான பெரிய வெற்றியாகக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிராக, Auchan குழுமம் இந்த தீர்ப்பு சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி, மாநில கவுன்சில் (Conseil d’État) முன் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியான போது, திட்டத்தின் கீழ் பெரும்பாலான பணிநீக்கங்கள் ஏற்கனவே நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டிருந்துள்ளன. 

Auchan நிறுவனத்தின் தகவலின்படி, 80%க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலைவாய்ப்பு பாதுகாப்புத் திட்டத்தின் (PSE) அடிப்படையில், மறுசேர்ப்பு, முன்கூட்டிய ஓய்வு அல்லது வேறு வேலை வாய்ப்புகள் மூலம் தீர்வுகளை கண்டுள்ளனர் என Auchan தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சமூகத் திட்டம் சட்டவிரோதம் என உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நீதிமன்றங்களை அணுகி கூடுதல் இழப்பீடுகளைப் பெற முடியும் என தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்