ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்?
7 தை 2026 புதன் 13:28 | பார்வைகள் : 885
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான 2 நாட்களே உள்ள நிலையில், இன்னும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த மாதம் படத்தை தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது.
தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க வலியுறுத்தி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளது ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ். இந்நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பி.டி. ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். தணிக்கை வாரியம் முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியதாகவும் ஆனால், திடீரென தணிக்கை சான்று குறித்து முடிவெடுக்க மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறியதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு குற்றஞ்சாட்டியது.
மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகப் புகார் வந்துள்ளதாக தணிக்கை வாரியம் கூறியதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் விவரித்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, ‘தணிக்கை குழுவில் இருக்கும் நபரே படத்தின் மீது புகார் கொடுத்தார்’ என தணிக்கை வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி தரப்பில், ‘UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும்” என கூறப்பட்டது. “மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்டுள்ள புகார் நிலைக்கத்தக்கதல்ல” என்றார். தணிக்கை வாரியம் தரப்பில், “ஜனநாயகன் படத்தில் அனுமதியின்றி பாதுகாப்பு படையினரின் லட்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு உத்தரவிட தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உண்டு” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், “விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும். இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ பட நிறுவனம் தரப்பில் “சென்சார் போர்டுபடத்தை பார்த்த தனிக்கை வாரிய உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பரிந்துரையாக தான் வழங்க முடியும்.. அதை புகாராக கருத முடியாது. தணிக்கை அதிகாரிகள் சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளார்கள். பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்டது.” என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan