Paristamil Navigation Paristamil advert login

கிரீன்லாந்து தொடர்பில் அறைகூவல் விடுக்கும் டிரம்ப்

கிரீன்லாந்து தொடர்பில் அறைகூவல் விடுக்கும் டிரம்ப்

7 தை 2026 புதன் 08:54 | பார்வைகள் : 406


கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான "பல்வேறு விருப்பங்கள்" குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவாதித்து வருவதாகவும், அதில் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை முன்னதாக, கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் விவகாரத்தில், அதன் நேட்டோ நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க முயன்றால், அது 80 ஆண்டுகால சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பின் முடிவாக அமையும் என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) எச்சரித்துள்ளார்.

வெனிசுவேலாவில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கனிம வளம் மிக்க கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு எதிராக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் டென்மார்க்குடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில் "கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, ஒரு நாட்டின் எல்லைகளையும் இறையாண்மையையும் வலுக்கட்டாயமாக மாற்ற முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்