Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்தத்திற்குப் பிறகு உக்ரைனில் அமைதியைப் பேண பல ஆயிரம் பிரெஞ்சு வீரர்களை நிறுத்த முடியும்: மக்ரோனின் விளக்கம் ! !

போர் நிறுத்தத்திற்குப் பிறகு உக்ரைனில் அமைதியைப் பேண பல ஆயிரம் பிரெஞ்சு வீரர்களை நிறுத்த முடியும்: மக்ரோனின் விளக்கம் ! !

7 தை 2026 புதன் 07:39 | பார்வைகள் : 2168


ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் France 2 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு அமைதியை பாதுகாப்பதற்காக “பல ஆயிரம்” பிரெஞ்சு வீரர்கள் அனுப்பப்படலாம் என்று தெரிவித்துள்ளார். sdfsdf

இவை போரில் ஈடுபடும் படைகள் அல்ல என்றும், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ரஷ்யா–உக்ரைன் எல்லை கண்காணிப்பு மற்றும் உக்ரைன் இராணுவத்தை மீளமைக்கும் பணிகளில் பிரான்ஸ் பங்கேற்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

உக்ரைனியர்கள், தன்னார்வ கூட்டணிகள் மற்றும் அமெரிக்கர்கள் இணைந்து எல்லைப் பகுதி மீறப்படுகிறதா என்பதை கண்காணிப்பார்கள் என மக்ரோன் கூறியுள்ளார். 

பரிசில் நடைபெற்ற கீவ் கூட்டாளிகள் கூட்டத்தின் பின்னர் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்; அமைதி ஏற்பட்ட “அடுத்த நாள்” முதல் இந்த பன்னாட்டு நடவடிக்கைகள் அமுலுக்கு வரும் என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்