செனாப் நதி குறுக்கே அணை கட்டும் பணி வேகமெடுத்தது!
7 தை 2026 புதன் 14:24 | பார்வைகள் : 192
ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே, 3,000 மெகாவாட் நீர் மின் திட்டத்தை அமைப்பதற்காக, நான்கு அணைகள் கட்டும் பணிகளை, 2028க்குள் முடிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் நீராதாரம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம், தன் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு மூலம் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு, நம் நாட்டுக்கு எதிராக கோழைத்தனமான தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன் சமீபத்திய உதாரணம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதல். இதில், 26 பேர் கொல்லப் பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் துணிச்சலான நேரடி தாக்குதலில் ஈடுபட்டது.
4 அணைகள்
அதுமட்டுமின்றி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஒப்பந்தம், 1960ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி பீஸ், ரவி, சட்லஜ் நதிகள் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளின் நீர் ஓட்டத்தை குறுக்கீடு செய்யாமல் குடிநீர் வினியோகம், மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு மட்டும் இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் அனுமதி அளித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர், மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்த போதும், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்ற ஒரே மனிதாபிமான காரணத்துக்காக, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கை வைக்காமல் தவிர்த்து வந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, அந்த மூன்று நதிகளின் நீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் திட்டங்களை நம் அரசு துவங்கியது.
பாகிஸ்தானின் உணவு கூடை என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாகாணம், 1.60 கோடி ஹெக்டர் விளைநிலங்களுக்கு செனாப் உள்ளிட்ட நதிகளையே நம்பி உள்ளது. மேலும், குடிநீருக்கும் செனாப் நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் நீர் மின் திட்டத்துக்காக, செனாப் நதியின் குறுக்கே நான்கு அணைகளை மத்திய அரசு கட்ட துவங்கியது.
பாஹல் துல் அணை -- 1,000 மெகாவாட்; கிரு அணை - 624 மெகாவாட்; குவார் அணை - 540 மெகாவாட்; ரத்லே அணை - 850 மெகாவாட் ஆகிய நீர் மின் திட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் பாஹல் துல், கிரு, குவார் ஆகிய அணைகள் ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த திட்ட பணிகளை, கடந்த 4ல் நேரடியாக ஆய்வு செய்தார். ரத்லே அணையின் நீர் மின்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சில பணிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அதன் பின், தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் செனாப் நீர் மின் திட்ட அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பாஹல் துல் மற்றும் கிரு நீர் மின் திட்டங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், குவார் திட்டத்தை 2028-க்குள்ளும், ரத்லே அணை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
கண்டனம்
திட்டமிட்டப்படி இந்த பணிகள் நிறைவடைந்தால், 2028க்கு பின் ஜம்மு - காஷ்மீரின் மின் தேவை பூர்த்தியாவதுடன், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவு மற்றும் நேரத்தை இந்தியா தீர்மானிக்கும். செனாப் நதியில் அணைகள் கட்டுமானத்தை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு எம்.பி., ஷெர்ரி ரஹ்மான் நேற்று கூறுகையில், ''இது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல். ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நீக்கிவிட்டு, அணை கட்டும் பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். நீரை ஆயுதமாக்குவதை ஏற்க முடியாது. இது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்,” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan