அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியை நாடு கடத்துவாரா? காங்., மூத்த தலைவர் பிருத்விராஜ் சர்ச்சை
7 தை 2026 புதன் 13:16 | பார்வைகள் : 182
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து, அமெரிக்க படைகள் நாடு கடத்திய நிலையில், ''பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறை பிடித்து நாடு கடத்துவாரா?'' என, காங்., மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான், 79, கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, அந்நாட்டின் தலைநகர் கராகஸ் நகரில் வைத்து, அமெரிக்கப் படையினர் கைது செய்து, சமீபத்தில் நாடு கடத்தினர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டின் மீது, சில மாதங்களுக்கு முன், 50 சதவீதம் வரி விதித்தார். இதை மேலும் அதிகரிக்கப் போவதாக சமீபத்தில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் நேற்று கூறியதாவது:
அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்பு நம் நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும். நம் ஏற்றுமதியாளர்களுக்கு இனி லாபம் கிடைக்காது. எனவே, மாற்று சந்தைகளை தேட வேண்டும். நேரடியாக தடை விதிக்க முடியாததால், வர்த்தகத்தை நிறுத்த வரியை ஒரு கருவியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்துகிறார்.
அடுத்து என்ன நடக்கும்? வெனிசுலாவில் நடந்து போல இந்தியாவிலும் நடக்குமா? பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் நாடு கடத்தி விடுவாரா? இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan