அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
7 தை 2026 புதன் 09:48 | பார்வைகள் : 152
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், ரோடு ஷோகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்., 27ல் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏராளமானோர் கூடுவதை கட்டுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ' தமிழக அரசு வகுத்த வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக, பரிந்துரைகள், ஆட்சேபனைகள், கருத்துகள் போன்றவற்றை, மாநில அரசு பரிசீலித்து, இறுதி செய்யப்பட்டநிலையான வழிகாட்டு விதிமுறைகளை, ஜனவரி, 5ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்' என, தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஐந்தாயிரம் பேருக்கு மேல் திரள்வர் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கலாசார, மத நிகழ்வுகளுக்கு, இந்த விதிகள் பொருந்தும். ஆனால், வழிப்பாட்டு தலங்களில் நடக்கும் மத ரீதியான கூட்டங்களுக்கு, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது
* நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில், தேர்தல் கமிஷன் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும்
* கூட்ட கட்டுப்பாடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது, கூட்ட ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு
* ஐந்தாயிரத்துக்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு, இது பொருந்தாது. ஆனால், தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்
* பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ேஷா, ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை நடக்க உள்ள இடங்களை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து, மாவட்ட கலெக்டர் முடிவெடுத்து அறிவிப்பார்
* பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் முன், என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பர், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விபரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்
* ரோடு ஷோக்களை பொறுத்தவரை, தலைவர்கள் பிரசாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் * தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம், புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்
* இது மாதிரியான நிகழ்வுகளில், மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை, பொதுப்பணித் துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பொதுப்பணி துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு, 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்
* ஐம்பது ஆயிரம் பேருக்கு மேல் திரளும் கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு, 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்படக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொறுத்தவரை, மாவட்ட கலெக்டரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
* விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்
* நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு
* நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்
* நிகழ்ச்சி முடிந்த பின், அந்த இடத்தை முழுமையாக துாய்மை செய்து வழங்க வேண்டும்
* கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்கள் பாதுகாப்பாக பங்கேற்க, அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும்
* நிகழ்ச்சி துவங்குவதற்கு, 2 மணி நேரத்திற்கு முன்னரே, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பல விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan