Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு உணவகங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க மக்ரோன் முன்மொழிவு!!

பிரெஞ்சு உணவகங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க மக்ரோன் முன்மொழிவு!!

6 தை 2026 செவ்வாய் 19:42 | பார்வைகள் : 2380


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரான்சின் பிஸ்ட்ரோக்கள் (bistrots- காபி இயந்திரம் மற்றும் பார் கவுண்டர் ஆகியவற்றைக் கொண்ட சிறிய உணவகம்) மற்றும் கஃபேக்களை (cafés) யுனெஸ்கோவின் பண்பாட்டு பாரம்பரிய பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

ஏற்கனவே பக்கெத் பான் (la baguette) இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், “எங்கள் கஃபேக்களும் பிஸ்ட்ரோக்களும் நிறைய குரோசான்கள், பக்கெத்துகள் போன்ற பாரம்பரிய தயாரிப்புகளை விற்பனை செய்கின்றன. அவை பிரான்சின் கைவினைத் திறன் மற்றும் பாரம்பரியத்தை முன்னணியில் கொண்டு செல்கின்றன” என்று, எலிசே மாளிகையில் நடைபெற்ற எப்பிபனி மூவிராசாக்கள் திருநாளை (Epiphanie) முன்னிட்டு பாரம்பரிய கலெத் (la galette) வழங்கும் நிகழ்ச்சியில் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியை «Bistrots et Cafés de France» சங்கமும் 2024 முதல் ஆதரித்து வருகிறது. மேலும், மே 1 தொழிலாளர் தினத்தில் உணவுக் கடைகள், குறிப்பாக பேக்கரிகள், விரும்பினால் திறக்க அனுமதிக்கும் சட்டத்தை மக்ரோன் ஆதரித்துள்ளார். அதற்காக ஊழியர்களின் சம்மதம் மற்றும் கூடுதல் ஊதியம் அவசியம் எனவும் கூறியுள்ளார். 

இந்த விஷயம் 2025 ஏப்ரல் மாதத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது; ஏனெனில் சில பேக்கரிகள் அந்தப் பொது விடுமுறையில் ஊழியர்களை வேலைக்கு வைத்ததற்காக, தொழிலாளர் ஆய்வுத் துறையின் குற்றம் சாட்டப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்