Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு

இலங்கையில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு

6 தை 2026 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 321


வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்