Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

6 தை 2026 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 1075


ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 10:18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் தீவிர அளவுகோலில் 5ஆம் நிலை கொண்ட வலுவான நிலநடுக்கம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10 நிமிடங்களுக்குப் பின்னர், யசுகி பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்த ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பல பின்அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்