Paristamil Navigation Paristamil advert login

தென்கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு-சந்தேக நபர் கைது

தென்கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு-சந்தேக நபர் கைது

6 தை 2026 செவ்வாய் 04:57 | பார்வைகள் : 204


பிரித்தானியாவின் பெக்ஸ்லிஹீத்(Bexleyheath) பகுதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத் பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இறங்கியுள்ளார்.

இதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாக திங்கட்கிழமை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணி அளவில் பெக்ஸ்லிஹீத் பிராட்வே பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக வந்த அழைப்பை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

அங்கு துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதை கண்ட பொலிஸார், உடனடியாக அவசர சேவைகளின் உதவியுடன் இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 35 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்